மாணவர்களை நேரில் அழைத்து தேர்வு - "சுஷில் ஹரி ரெசிடென்சியல் மேல்நிலைப்பள்ளி” மீது குற்றச்சாட்டு
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்ற 300க்கும் மேற்பட்ட மாணவர்களை நேரில் அழைத்து தகுதித் தேர்வு நடத்தியதாகக் கூறப்படும் தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மாணவர்கள் பள்ளிக்கு வரும்பட்சத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சத்தால், தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பது குறித்து அரசு பல்வேறு வகைகளிலும் ஆலோசனைகள் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், கேளம்பாக்கம் ”சுஷில் ஹரி ரெசிடென்சியல் மேல்நிலைப்பள்ளி” என்ற பள்ளியில், ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்ற 5 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை நேரில் அழைத்து தகுதித் தேர்வு நடத்தியுள்ளனர் என புகார் எழுந்துள்ளது. எனவே பள்ளிக்கல்வித்துறை உரிய ஆய்வு செய்து, தனியார் பள்ளி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது.
மாணவர்களை நேரில் அழைத்து தேர்வு - "சுஷில் ஹரி ரெசிடென்சியல் மேல்நிலைப்பள்ளி” மீது குற்றச்சாட்டு #Chengalpattu #onlineclass #Exam #SushilHariInternationResidentialSchool #Kelambakkam https://t.co/3Yva7qs9cE
— Polimer News (@polimernews) July 25, 2020
Comments